Saturday, June 12, 2010
ஆளூர் முஸ்லிம் அஸோஸியேஷன் - பொதுக்குழு கூட்டம்
ஆளூர் முஸ்லிம் அஸோஸியேஷன் சார்பாக 13-6-2010, அன்று சென்னை,புதுப்பேட்டை, சமூக நலக்கூடத்தில் அஸோஸியேஷனின் பொதுக்குழு கூட்டம் அல்லாஹுவின் பேரருளால் இனிதே நடைப்பெற்றது.
சுமார் மதியம் 1.30 மணியளவில் விருந்து நடைபெற்றது. இதை தொடருந்து மாலை 3.௦௦00 மணிக்கு பொதுக்குழு கூட்டம் ஹாஜி M.A. பஷீர் அவர்களின் தலைமையில் ஆரம்பம்மானது. முதலில் மதரசா மன்பவுல் ஹசநாத்தை சார்ந்த இரு மாணவர்கள் கிராஆத் மற்றும் தமிழ் விளக்கத்தோடு நிகழ்ச்சி நிரல் ஆரம்பம் ஆயிற்று......
இதில் 2009 - 2010 நிதியாண்டுக்கான வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டது , தொடர்ந்து சொந்த இடம் வாங்குவதற்காக பொதுக்குழுவின் அனுமதி பெறப்பட்டது.
மேலும் ஆண்டறிக்கை மற்றும் அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது. பொதுக்குழு ௨றுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பைலா மற்றும் "எங்கள் தாயகம்" புத்தக முகவரி மற்றும் கைபேசி எண்கள் திருத்தப்பட்டது,புதிய ௨றுப்பினர்கள் பட்டியல் புத்தககங்கள் அனைத்து ௨றுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டது.
ஆ.மு.அ க்கு எங்கள் பாராட்டுக்கள்......
Labels:
A.M.A,
aloor,
Book,
Engal Taayagam,
Meeting,
ஆ.மு.அ,
ஆளூர்,
ஆளூர் முஸ்லிம் அஸோஸியேஷன்,
எங்கள் தாயகம்