நம் தமிழ் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கே உயிரான தொல்காப்பயுப் பாயிரத்தில் "வடவேங்கடம் தென்குமரி" என இமயம் முதல் குமரி வரை இந்தியத் திருநாட்டின் எல்லையை சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது.
முக்கடலும் சங்கமிக்கும் தென்புலமாம் கன்னியாகுமரி பெயராகக் கொண்டது எங்கள் மாவட்டம். அதன் தலை நகரமாம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கான் கடையிலிருந்து தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நான் (ஆளூர்) அமைந்துள்ளேன் .....